![]() |
பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து! ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து உலகசாதனை!Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 01 , 2022 17:24:25 IST
பாகிஸ்தான் நாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று மட்டையாட்டத்தை தெரிவு செய்த இங்கிலாந்து அணியினர் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் க்ராலி, பென் டக்கெட் இருவரும் சதம் அடித்து ஆட்டமிழக்க, பின்வந்த ஆயிலி போப், ஹாரி ப்ரூக் இருவருமே சதம் அடித்தனர். ஜோ ரூட் மற்றும் இந்த சத மழையில் நனைய முடியாமல் ஆட்டமிழந்துவிட்டார். ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் அதிகப்படியாக ரன் குவித்த அணி என்ற உலகசாதனையை 494 ரன்களைக் கடந்தபோது இங்கிலாந்து முறியடித்து நான்கு விக்கெட் இழப்புக்கு 506 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறது. இன்று 75 ஓவர்களுடன் வெளிச்சம் போதவில்லை என ஆட்டத்தை நடுவர்கள் முடித்து வைத்தனர். 90 ஓவர்கள் ஆடியிருந்தால் என்ன ஆகியிருக்குமோ? இத்தனைக்கும் பாகிஸ்தான் போன இங்கிலாந்து அணியினர் பலர் ஒரு வித வைரஸ் தாக்குதலால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
England scores 506 runs vs Pak
|
|