???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   24 , 2019  23:07:33 IST

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், சேர்வதற்கான கலந்தாய்வை, இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில் பங்கேற்க விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்து  4 ஆயிரம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் சிறப்புப்பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தரவரிசையில் முதல் 80 பேரும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 58 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நாளையும், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த நேரடி கலந்தாய்வு அனைத்தும், சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதன் பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட  உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...