???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி 0 துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி 0 காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி 0 “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து 0 இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் 0 ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்கவுண்டர்: அரவிந்த் கெஜ்ரிவால், மேனகா காந்தி கண்டனம்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   06 , 2019  22:47:31 IST

தெலங்கானா மாநிலம் ஹைதராத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தவிவகாரம் குறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘பாலியல் வன்கொடுமை விவகாரங்கள் வெளிச்சத்துக்குவரும் பொதுமக்கள் மிகவும் கோபமடைகிறார்கள். அது உன்னோ சம்பவமாக இருந்தாலும், ஹைதராபாத் சம்பவமாக இருந்தாலும். அதனால், மக்கள் என்கவுன்டர் சம்பவத்துக்கு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம், மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கையை இழந்துவருகின்றனர்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ‘இது ஒரு கொடூரமான விஷயம். நீங்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது. எப்படி இருந்தாலும், நீதிமன்றத்தால் அவர்கள் தூக்கிலிடப்பட்டிருப்பார்கள்.

நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக நீங்கள் அவர்களை சுட்டுக் கொல்வதாக இருந்தால் நீதிமன்றங்களின் பணி என்ன? நீதித்துறையின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படவேண்டும்’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...