???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு 0 பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 0 பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் 0 நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! 0 திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை 0 வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு! 0 மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் 0 பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது! 0 அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு! 0 எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து 0 ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்! 0 அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! 0 மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இன்று 42-வது ஆண்டு: இந்திராகாந்தி கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   26 , 2017  08:34:03 IST


Andhimazhai Image

இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்ட வரலாறு தனி இடம் பிடித்து இருப்பது போல் இன்றிலிருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா அமல்படுத்திய நெருக்கடி நிலை பிரகடனம் இன்றும் பேசப்படுகிறது.

 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவி ஏற்றது முதல் காங்கிரஸ் கட்சி மட்டுமே அசுர பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. ஆனால் இந்திராவின் தலைமையில் 1971-களில் கட்சி ஒரு சரிவை சந்தித்தது. எதிர்க்கட்சிகள் வலுவாக தடம் பதித்ததால் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க தடுமாறியது. இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் பெற்ற வெற்றியும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜ்நாராயண் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா இந்திராவின் வெற்றி செல்லாது என்று 1975 ஜூன் 12-ல் தீர்ப்பளித்தார்.

 

எம்.பி. பதவியில் இருந்து உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும். 6 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.

 

பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை தொடர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியை உருவாக்கினார்கள். நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடந்தது.

 

டெல்லி தெருக்களில் மக்கள் வெள்ளமாக திரண்டு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினார்கள். பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு ஆகியவை பூட்டப்பட்டன. நெருக்கடிக்கு ஆளான இந்திரா நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்த முடிவெடுத்தார்.

 

பிரதமர் இந்திராவின் கோரிக்கையை ஏற்று அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது நெருக்கடி நிலை பிரகடனத்தை 1975 ஜூன் 25 இரவில் பிறப்பித்தார். இந்த சட்டத்தின் மூலம் பாராளுமன்ற தேர்தல், மாநில அரசுகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது.

 

இந்தியாவின் கருப்புச் சட்டம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த நெருக்கடி நிலையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் பெரிய அளவில் வெடித்தன. அனைத்து துறைகளும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அடக்கி ஆளப்பட்டன.

 

மத்திய அரசை எதிர்த்த தலைவர்கள் நாடு முழுவதும் வேட்டையாடப்பட்டு சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயண், ராஜ்நாராயண், மொரார்ஜி தேசாய், கிருபாளனி, வாஜ்பாய், அத்வானி உள்பட தேசிய தலைவர்கள் சிறைபட்டனர். பலர் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள். காமராஜர் நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தார். ஆனால் நெருக்கடி நிலை அமலான 4 மாதத்தில் அவர் மறைந்தார்.

 

அப்போதைய தி.மு.க. ஆட்சியும் எதிராக இருந்ததால் மு.க.ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறை சித்ரவதைகளை அனுபவித்தார்கள். தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்பட்டது.

 

எந்த காரணமும், முன்னறிவிப்பும் இல்லாமல் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான அரசியல்வாதிகள் பலர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘மிசா’ என்ற அடைமொழியை போட்டு பிற்காலத்தில் அரசியலுக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

 

ஆனால் குறிப்பிடத்தக்க சில நல்ல மாற்றங்களும் நடந்தன.  அரசு அலுவலகங்கள் சரியாக இயங்கியது. அலுவலர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகங்களுக்கு வந்தார்கள். சரியாக வேலை பார்த்தார்கள். வேலை நிறுத்தங்கள், கடை அடைப்புகள், போராட்டங்கள் என்று எதுவும் இல்லை. கள்ள மார்க்கெட், பதுக்கல் என்று எதுவும் இல்லை.

 

ஒரு சில நல்ல வி‌ஷயங்கள் இருந்தாலும் மக்கள் நெருக்கடிக்குள் இருந்தனர். இந்திராவுக்கு பக்க துணையாக இருந்த அவரது மகன் சஞ்சய் காந்தியின் தேவையற்ற நடவடிக்கை மூலம் கடும் அதிருப்தி ஏற்பட்டது. கட்டாய கருத்தடை அமலானது. 

 

கொந்தளிப்பான நிலையில் நாடு இருந்த சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு 1975 டிசம்பர் 19-ந்தேதி வழங்கிய இறுதி தீர்ப்பில் இந்திராவின் வெற்றி செல்லும் என்று அறிவித்தது. அதன் பிறகு பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நம்பினார். ஆனால் 21 மாதம் அனுபவித்த நெருக்கடி கால அனுபவத்தால் 1978-ல் நடந்த பொதுத்தேர்தலில் இந்திரா பெரும் தோல்வியை சந்தித்தார்.

 

இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் இந்த நெருக்கடி நிலைப்பிரகடனம் என்றால் அது மிகை அல்ல.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...