???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இப்படியா மகனுக்குப் பெயர் வைப்பீங்க மிஸ்டர் எலான் மஸ்க்?

Posted : திங்கட்கிழமை,   மே   11 , 2020  08:26:55 IST


Andhimazhai Image
 
 
அமெரிக்க மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் தலைவரும் புகழ்பெற்ற தொழிலதிபருமான எலான் மஸ்க் சமீபத்தில் பிறந்த தன் குழந்தைக்கு வைத்திருக்கும் பெயர் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.  X Æ A-12 -இதுதான் மகனுக்கு அவர் வைத்த பெயர். எப்படிங்க இந்த பெயரை உச்சரிப்பீங்க மஸ்க் சார் என்று எல்லோரும் சமூக ஊடகங்களில் குறிப்பாக ட்விட்டரில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் இது பேர் இல்லை! மஸ்க்கின் ரகசிய பாஸ்வேர்டு என்றும் கிண்டல் அடித்தனர்.
 
 எலான் மஸ்க் தன் இணையரும் கனடாவைச் சேர்ந்த பாடகியுமான கிரிம்ஸ் தான் இந்த பெயரைத்தேர்ந்தெடுத்தார் என்று கூறி எப்படி அதை உச்சரிப்பது என்று விளக்கி உள்ளார். எக்ஸ் என்பதை எக்ஸ் என்றும் Æ என்பதை ஆஷ் என்றும் A-12 என்பதை ஏட்வெல்வ் என்றும் உச்சரிக்கவேண்டும். எக்ஸேஷேட்வெல்வ் என்று பெயர் வருகிறது.
 
கடைசியில் வரும் A-12 என்பதை மஸ்க்தான் சேர்த்துள்ளார். A-12 என்பது ஆர்ச்சேஞ்சல் 12 என்கிற அமெரிக்க விமானத்தின் பெயராகும். இது சிஐஏவுக்காக வடிவமைக்கப்பட்ட உளவு விமானத்தின் பெயர். இந்த விமானம் எனக்கு மிகவும்பிடித்தமானது எனவே அந்த பெயரை வைத்துள்ளேன் என்று அவர் கூறுகிறார்.
 
இப்போது என்ன சிக்கல் என்றால் அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் குழந்தையின் பெயரை பதிவு செய்யவேண்டுமானால் அதில் 26 ஆங்கில எழுத்துக்களே அனுமதிக்கப்படுமாம். இந்த பெயரில் இருக்கும் எண்கள் அனுமதிக்கப்படாது. எலான் மஸ்க், எல்லாவற்றையும் சமாளிப்பவர் இதையும் சமாளிப்பார்.!
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...