???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்!

Posted : புதன்கிழமை,   ஜுன்   03 , 2020  03:31:07 IST


Andhimazhai Image

 

கேரளத்தில் அமைதிப்பள்ளத்தாக்கு அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து பக்கத்து கிராமத்துக்குள் புகுந்தது அந்த காட்டு யானை. கருவுற்றிருந்த அது, வழியில் கிடந்த ஓர் அன்னாசிப்பழத்தைக் கண்டது. ஆசையுடன் அதை எடுத்து உண்டது. அதற்குத் தெரிந்திருக்கவில்லை, கிராமவாசி ஒருவர் அதற்குள் நாட்டுவெடியை மறைத்து வைத்திருக்கிறார் என. ஓசையுடன் வாயில் வெடித்தது அன்னாசிப் பழம். அதன் வாயும் நாக்கும் கிழிந்துபோய்விட, வலியில் துடித்த அந்த யானை, கிராமத்தின் தெருக்கள் வழியாக ஓடியது. வெள்ளியாறு என்று ஆற்றில் போய் இறங்கி தன் வாயை தண்ணீருக்குள் வைத்தவாறு நின்றுகொண்டது. கடந்தவாரம் 27-ஆம் தேதி அது ஆற்றில் நின்றவாறே காயம் காரணமாக இறந்துவிட்டது.

பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காக்க அன்னாசிப் பழத்தில் வெடி வைப்பது அப்பகுதியில் வழக்கமாம். அது யானையின் உயிரைப் பறித்துவிட்டது.

இதன் நிலையைக் கவனித்த கேரள வனத்துறையினர் அதை ஆற்றில் நின்றபோதே பிடித்து மருத்துவம் பார்க்க இரண்டு கும்கி யானைகளுடன் நெருங்கி  உள்ளனர். ஆனால் யாரையும் அது அருகே அனுமதிக்கவில்லை. பதினைந்து வயதான அது இறந்தபின்னர் அதை எடுத்து பிரேதப்பரிசோதனை செய்தபோது அதன் இறப்புக்கான காரணம் புரிந்தது. தண்ணீர் அதன் நுரையீரலுக்குள் புகுந்திருந்தது. பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்தான் அது கருவுற்றிருப்பதைக் கண்டுபிடித்தார். இன்னும்  இருபது மாதங்களில் அது ஓர் குட்டியை ஈன்றிருக்கும்.

”வாய்க்குள் அன்னாசிப்பழம் வெடித்த உடனே தன் குட்டியை நினைத்திருக்கும். அந்த  கிராமத்தின் தெருக்களில் அது வலியுடன்  ஓடியபோதும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. நாங்கள் அதை ஆற்றில் இருந்து மீட்க முயன்றபோதும் அது ஒத்துழைக்கவில்லை. அதன் ஆறாவது அறிவு தன் மரணத்தைப் பற்றி சொல்லியிருக்கும்போல. அது நீரிலேயே ஜலசமாதி அடைந்தது,” என அதை மீட்க முயன்ற குழுவைச் சேர்ந்த வன அதிகாரி மோகன கிருஷ்ணன் சமூக ஊடகத்தில் எழுதி உள்ளார்.

” மரண அடைந்தபின் உடலை லாரியில் ஏற்றிச் சென்று காட்டுக்குள் அது விளையாடிய இடத்தில் தகனம் செய்தோம். அதைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், அது தனி ஆள் அல்ல என்கிற விவரத்தை சோகத்துடன் கூறினார். அதை தகனம் செய்தபோது தலைவணங்கி மரியாதை செய்தோம்,” எனவும் அந்த அதிகாரியின் குறிப்பு கூறுகிறது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...