![]() |
5 மாநில தேர்தல் : தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம்Posted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 23 , 2021 10:19:45 IST
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் எத்தனை கட்டமாக தேர்தலை நடத்துவது, எந்தெந்த மாநிலங்கள் எந்தெந்த கட்டதில் தேர்தலை சந்திக்கும், வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாகவும், முழு ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.அதன் பின்னர், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
|
|