![]() |
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 19-ந்தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனைPosted : சனிக்கிழமை, ஜனவரி 15 , 2022 08:42:55 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வரவிருக்கிற 19-ந்தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரண தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் அன்றைய தினம் பகல் 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது' என அதில் கூறப்பட்டுள்ளது.
|
|