???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு! 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உள்ளாட்சித் தேர்தல் ரத்து: தலைவர்கள் வரவேற்பு

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   05 , 2016  05:24:54 IST


Andhimazhai Image

தமிழக உள்ளாட்சித் தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை, பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி: மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை, உயர்நீதிமன்றம் சட்ட விரோதமானது என்று அறிவித்து ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்கவும், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது. மேலும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற நீதிபதி கிருபாகரன் அளித்துள்ள தீர்ப்பு பெரிதும் வழி வகுக்கும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆளுங்கட்சியும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்துக் கொண்டு உருவாக்கிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தொகுதிகளை மறுவரையறை செய்து, முறையாக இடஒதுக்கீட்டை இறுதி செய்து, அறிவிக்க வேண்டும். மேலும் உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை வரவேற்கிறேன். மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளையும் ரத்து செய்துள்ளதையும் வரவேற்கிறேன். நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை ஏற்று, மாநிலத் தேர்தல் ஆணையம் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்கி, இடஒதுக்கீட்டு முறையை சரியாக பின்பற்றி ஜனநாயக முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...