???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பக்ரீத் பண்டிகை: தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  00:43:51 IST

ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


தியாகத் திருநாளில் சமுதாய நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு திமுக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாகவும், அனைவரது வாழ்வில் வளமும், நலமும் பெருகிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


புனித தியாகத்திருநாளை பொறுமையோடு கொண்டாடி மகிழுங்கள் எனக்கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தியாகத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே,எஸ்.அழகிரி கூறியுள்ளார்.


பக்ரீத் திருநாள் சொல்லும் பாடங்களை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும், நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பக்ரீத் பண்டிகை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க இந்த ஈகைத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...