திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதித்தாலும் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கலுக்கு கட்டாயம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. தற்போது 100 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி திரும்பெறப்பட்டால், ஈஸ்வரன் படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதற்காகவே ‘ஈஸ்வரன்’ படம் எடுக்கப்பட்டதாக கூறியுள்ள படக்குழு, எந்த பிரச்னைகள் வந்தாலும் ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.