???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுகவை வழிநடத்து பாஜகதான்!: நல்லகண்ணு 0 நரசிம்மராவ் போல் மவுனம்: முதல்வரை விமர்சித்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ 0 இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 0 இன்று 42-வது ஆண்டு: இந்திராகாந்தி கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’ 0 தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை: 5-வது இடத்தில் தமிழகம் 0 கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி : ரஹானே சதமடித்தார் 0 ஆஸ்திரேலியா பாட்மிண்டன் : பட்டம் வென்றார் கிடம்பி ஸ்ரீகாந்த் 0 ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை: சீமான் 0 50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு 0 ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 0 ராஜஸ்தானில் மசூதிக்கு மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தல் 0 லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் வங்கி 0 சசிகலா குடும்ப நாடகத்துக்கு முதல்வரும் துணை: கே.பி. முனுசாமி 0 ரமலான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து 0 ரஜினி படித்தவர்: சு.சுவாமி கருத்து பொன்.ராதா பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அண்ணா நூலகத்துக்கு ரூ.5 கோடியில் புத்தகங்கள்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   15 , 2017  23:44:45 IST

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புதிதாக புத்தகங்கள் வாங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். பள்ளிக் கல்வித் துறையில் பல புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். 
 
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்போது பல புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
    
அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும், மாணவியர் படிக்கும் 5639 பள்ளிக்கூடங்களில் நாப்கின் வழங்கப்படும் எந்திரங்கள், எரியூட்டிகளை அமைப்பது, 31322 பள்ளிக்கூடங்களில் சிறுவர் இதழ்கள், நாளிதழ்களை வாங்குவது, 17,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடமாக மாற்றுவது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
 
மேலும், சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு 5 கோடி ரூபாய் செலவில் புதிய துறை சார்ந்த நூல்களை வாங்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இது தவிர, மதுரையில் 6 கோடி ரூபாய் செலவில் புதிய நூலகம் ஏற்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில், பொருள் சார்ந்த எட்டு காட்சிக் கூடங்களையும் நூலகங்களையும் அமைக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில், பழம்பெரும் நாகரீகங்கள் குறித்தும் தஞ்சாவூரில் நுண்கலை, நடனம் குறித்தும் நாட்டுப்புறக் கலைகள் குறித்து மதுரையிலும் தமிழ் மருந்துகள் குறித்து திருநெல்வேலியிலும் பழங்குடியினர் பண்பாடு குறித்து நீலகிரியிலும் கணிதம், அறிவியல் சார்ந்து திருச்சியிலும் அச்சுக்கலை சார்ந்து சென்னையிலும் வானியல் குறித்து கோவையிலும் காட்சிக் கூடங்கள், நூலகங்கள் தலா எட்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளன.
    
மேலும் அரிய நூல்கள், ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, அனைவரும் பயன்பெறும் வகையில் ஒரு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்றும் பிற மொழியில் உள்ள சிறந்த நூல்களை தமிழில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
 
இவை தவிர, வெளிநாடுகளிலும் மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழாசிரியர்களை அனுப்பப் போவதாகவும் சிங்கப்பூர், யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்களை அனுப்பப் போவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...