அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கர்நாடக ஆட்சிக் கவிழ்ப்பு பின்னணியில் எடியூரப்பா, அமித்ஷா: வைரலாகும் வீடியோ

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   03 , 2019  10:47:55 IST

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகிச் சென்ற 15 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களின் பெயரை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக எடியூரப்பா பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகிவைரலாகிவருகிறது.

அந்த வீடியோ பா.ஜ.கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 26-ம் தேதி ஹூப்ளியிலுள்ள டெனிஸ்ஸன்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் பதிவிட்டுள்ள இரண்டு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அறையின் மேல்பகுதிதான் தெரிகிறது. அதில், எடியூரப்பாவின் குரல் கேட்கிறது. அதில் பேசும் எடியூரப்பா, ‘இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதை நீங்கள் இவ்வளவு விரும்புவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இடைத்தேர்தலில் நாம், வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் தனி விஷயம். ஆனால், நீங்கள் ஒருவர் கூட நமக்காக விலகி வந்த எம்.எல்.ஏக்களுக்காக பேசவில்லை என்பது வருத்தமான விஷயம். 17 எம்.எல்.ஏக்கள் எடுத்த முடிவுகள் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அவர்கள் அனைவரையும் மும்பைக்கு கொண்டு சென்றது என்பது என்னுடைய முடிவு மட்டுமல்ல. தேசியத் தலைவரின் முடிவு. அவர்கள் இரண்டரை மாத காலம் தொகுதிக்கும் செல்லாம் குடும்பத்தினருடனும் பேசாமல் அங்கேயே இருந்தனர். நீங்கள் எல்லோரும் அதிகமாக அறிவுரை வழங்குனீர்கள். ஆனால், அவர்களது இடத்தில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை. விலகிவந்த எம்.எல்.ஏக்களுக்கு நம்பிக்கை அளித்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்ததன் மூலம், நான் குற்றவாளியாகியுள்ளேன்’ என்கிறார்.

கர்நாடகாவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னணியில் எடியூரப்பா மற்றும் அமித்ஷா இருந்துள்ளனர் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. இந்த ஆதாரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...