???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி 0 குட்கா வழக்கு: 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி 0 பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட் 0 ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   20 , 2018  00:14:54 IST

மோடி அரசு மீது தெலுங்குதேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. ஆந்திர மாநிலத்தின் பிரச்சினைக்காக அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். நாம் தமிழ்நாட்டினுடைய பிரச்சினைக்காக அப்போது காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் அவையே நடக்க முடியாத ஒரு சூழ்நிலையை, அங்கே நமது எம்.பி.க்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
 
அப்போது நமக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தார்கள்? யார் முன்வந்தார்கள்? நம்முடைய டெல்டா பாசன விவசாய மக்களுக்காக, நம்முடைய பிரச்சினை தீர்ப்பதற்காக எந்த மாநிலம் முன்வந்தது? எந்த மாநிலமும் முன்வரவில்லை. நம்முடைய எம்.பி.க்கள் தான் தமிழ்நாட்டின் மக்களுக்காக, தமிழ்நாட்டு விவசாய மக்களுக்காக, நம்முடைய உரிமையை பெறுவதற்காக அரசின் சார்பாக, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து நாடாளுமன்ற நிகழ்வே முடங்குகின்ற ஒரு சூழலை ஏற்படுத்தினார்கள். அப்போது யாரும் நமக்கு துணை நிற்கவில்லை. அவரவர் மாநிலங்கள் என்று வரும்போது பிரச்சினையை கிளப்புகிறார்கள்" என தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...