???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போக்குவரத்து விதிமீறல்: இரண்டு நாட்களில் ஒன்றரை லட்சம் வழக்குகள் பதிவு 0 இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! 0 டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை! 0 கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம்தான் முதன்மையான மொழி: எடியூரப்பா 0 பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: தலைவர்கள் வாழ்த்து! 0 பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை 0 பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது! 0 அதிமுக அரசின் லஞ்சம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: ஸ்டாலின் காட்டம் 0 ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதலமைச்சர் 0 அரசு அளித்த சத்தியத்தை ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்ற முயற்சிக்கக் கூடாது: கமல் 0 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் 0 உ.பி.யில் மாணவி பாலியல் புகார்: பாஜக தலைவர் சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு 0 இந்தி திணிப்பை எதிர்த்து மற்ற மாநிலங்களுடன் இணைந்து போராடுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 0 சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை! 0 ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களின் குறைகளைத் தீர்க்க முன்னுரிமை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   19 , 2019  06:57:51 IST


Andhimazhai Image
சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும்
திட்டத்தை துவங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உங்களுடைய மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும் என்பதையும்,
மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை
கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை:
 
"தமிழகத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களின் குறைகளை
விரைவாக தீர்ப்பதற்காக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்
அறிவிக்கப்பட்டு, அதன் திட்ட துவக்க விழாவை எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலே
துவக்கியிருக்கின்ற ஒரு உன்னதமான நாள். உங்களுடைய மனுக்கள் அனைத்தும்
பரிசீலிக்கப்பட்டு தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும் என்பதையும்,
மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை
கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும்,
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும்
தற்போது நடத்தப்படுகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு
முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
 
மேற்படி குறைதீர் முகாம்களில் பட்டா மாற்றம், சமூகப் பாதுகாப்புத் திட்டம் மற்றும்
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர்
ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற
சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும்
வகையில் ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தினை மாண்புமிகு அம்மாவின் அரசு
செயல்படுத்த இந்த நிகழ்ச்சியின் வாயிலாக துவக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்
நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்கள்தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று,
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டுமென்று உத்தரவு
வழங்கப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தின் மூலம், அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய
விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட
நாளில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற
துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று
மனுக்களைப் பெறுவார்கள். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு,
சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது
கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.
 
மேற்குறிப்பிட்ட மனுக்களின் மீதான தீர்விற்குப் பின், செப்டம்பர் மாதத்தில்
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்களும்
நடத்தப்படும். பல்வேறு நலத் திட்டப் பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு,
மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம்,
சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின்
போது தீர்வு காணப்படும். மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான திட்டமாக திகழும் இந்த சிறப்புத் திட்டத்தை செம்மையாக
நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் ரூபாய்
76 இலட்சத்து 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்பதையும் இந்தத் தருணத்தில்
தெரிவிக்க விரும்புகின்றேன்.
 
அதுமட்டுமல்லாமல், இவ்விழாவின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளும்
வழங்கப்படுகின்றது என்ற செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற
மிகப்பெரிய திட்டத்தை எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் இன்று துவக்கி வைத்ததின்
மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறப்பு குறை
தீர்க்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மற்றும் அனைத்துத் தரப்பு
மக்களாலும் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக இந்தத் திட்டத்தை
துவக்கியிருக்கின்றோம். தலைமைச் செயலாளர் அவர்கள் தெரிவித்தைப் போல,
இன்றைக்கு மக்கள் அதிகாரிகளை அணுகுவதைக்காட்டிலும், அதிகாரிகளே மக்களை
நாடி மக்களிடம் மனுக்களைப் பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்தத்
திட்டத்தை அம்மாவின் அரசு துவக்கியிருக்கின்றது.
 
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்
தங்களது தொகுதிகளுக்குச் சென்று மக்களை நேரிடையாக சந்திக்கவுள்ளார்கள்.
முதலமைச்சர் என்ற முறையில் 234 தொகுதிகளில் இருக்கின்ற பிரச்சினைகளில்
கவனம் செலுத்த வேண்டும். இருந்தாலும், அவ்வப்போது எடப்பாடி சட்டமன்றத்
தொகுதிக்கு வந்து, மக்களை சந்தித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
நாட்டுகின்றோம், முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு திறப்பு விழா காண்கிறோம்.
அதுமட்டுமல்லாமல், ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகள்
வழங்குகின்றேன். ஆகவே, நான் எங்கே சென்றாலும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் எப்பொழுதும் தனி கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 2011ஆம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்பொழுது, மக்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றேன். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மாண்புமிகு இதயதெய்வம்
அம்மா அவர்களிடத்தில் தெரிவித்து சுமார் ரூபாய் 146 கோடி மதிப்பீட்டில் மேச்சேரிநங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு
கொண்டு வந்தது அம்மாவின் அரசு. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்றித் தந்திருக்கின்றோம்.
 
மருத்துவமனை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், நங்கவள்ளியில் உள்ள ஆரம்ப
சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்களை நியமித்து, 30 படுக்கைகள் கொண்ட
மருத்துவமனையாக மேம்படுத்தி, கட்டடங்கள் கட்டிக் கொடுத்து தேவையான
வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல், சவுரியூரில்
புதிதாக மருத்துவமனை திறந்திருக்கின்றோம். வனவாசி ஆரம்ப சுகாதார
நிலையத்திற்கு கட்டடம் கட்டிக் கொடுத்திருக்கின்றோம். ஜலகண்டபுரம் பேரூராட்சியில்
இருக்கின்ற அரசு மருத்துவமனைக்கு போதிய வசதிகளை செய்து
கொடுத்திருக்கின்றோம். மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வேண்டுமென்பதே எங்களின்
இலட்சியம்.
 
மேலும், ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மருத்துவ முகாம்கள் நடத்தி,
மக்களின் நோய்களைக் கண்டறிந்து அதற்குத் தகுந்த மருத்துவ சிகிச்சையை
அம்மாவின் அரசு அளித்து வருகிறது. இந்தியாவிலேயே, மருத்துவத் துறையில் தமிழகம்
தான் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு மத்திய அரசிடமிருந்து தொடர்ந்து விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகள் செயல்பட்டுக்
கொண்டிருக்கின்றன. இதயதெய்வம் அம்மா அவர்கள் வழங்கிய திட்டங்களை
அம்மாவின் அரசு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றது.
நங்கவள்ளியில் தீயணைப்பு நிலையம், பேருந்து நிலையம் கட்டிக்
கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கோயம்புத்தூர், பெங்களூரூ, ஈரோடு என
அனைத்து இடங்களுக்கும் செல்ல பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
உலகத் தரத்திற்கேற்ற சாலைகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.
நெடுஞ்சாலைத் துறை மட்டுமல்ல, கிராமங்களில் உள்ள சாலைகளையும் நவீன
இயந்திரங்கள் மூலம் சிறப்பான சாலைகளாக அமைத்துக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றோம். கிராமப்புற சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலைக்கு
இணையாக அமைத்துக் கொடுத்திருக்கிறோம். ஆகவே, கிராமப்புறங்களில் வாழும்
மக்களுக்கும், நகரங்களில் வாழும் மக்களுக்கு இணையாக வசதிகளை செய்து
கொடுத்த அரசு எங்களுடைய அரசு.
 
தெரு விளக்கு வசதிகள் LED Bulb வசதி எல்லா இடத்திலும் செய்து
கொடுத்திருக்கிறோம். 2014-தேர்தலின்போது, இங்கே பாலிடெக்னிக் கல்லூரி
கேட்டீர்கள், அதையும் வனவாசி பகுதியிலேயே மிகப் பிரம்மாண்டமாக பாலிடெக்னிக்
கல்லூரி கொடுத்து, நம்முடைய மாணவச் செல்வங்கள் இங்கேயே குறைந்த
கட்டணத்தில் பயிலுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம். அதேபோல
ஜலகண்டாபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை
வேண்டுமென்று கேட்டீர்கள், அங்கேயும் புறவழிச்சாலை அமைக்கப்படும். 
 
வாய்பேச முடியாத கால்நடை ஜீவன்களுக்கும் நாங்கள் மருத்துவமனை
கொடுத்திருக்கிறோம். சேலம் மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் கால்நடை
மருத்துவiனையை கட்டிக் கொடுத்து, அதற்குத் தேவையான போதிய
மருத்துவர்களையும் நியமித்திருக்கிறோம். மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை, சமூக நலக்
கூடங்கள் ஆகியவை கொடுத்திருக்கிறோம். பெரிய சோரகையில் பெருமாள் கோயில்
கட்ட வேண்டும் என்று கோரிக்கைக்கிணங்க, அதையும் கட்டிக் கொடுப்பதற்கு
நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சவுரியூரில் மாதிரிப் பள்ளி, சின்னச்சோரகையில்
உயர்நிலைப்பள்ளி ஆகியவை கட்டிக் கொடுத்திருக்கிறோம், ஜலகண்டாபுரம்,
நங்கவள்ளி, வனவாசி ஆகிய பகுதியில் னசயiயேபந வசதியையும் செய்து
கொடுத்திருக்கிறோம். எல்லா வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து
கொடுக்கின்ற அரசு எங்கள் அரசு தான். கைத்தறி, விசைத்தறிக்கு விலையில்லா
மின்சாரம் கொடுக்கின்ற அரசு எங்கள் அரசு.
 
மேட்டூரிலிருந்து வருகின்ற உபரிநீரை மேலேற்று மூலமாக ஏரிகளில்
நிரப்பவேண்டும் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் சொன்னார்கள். ரூ.565 கோடியில்
100 ஏரிகள் நிரப்படுகின்ற ஒரு சூழ்நிலையை திட்டம் துவங்க நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு திட்டம் துவங்க இருக்கிறது. எடப்பாடி சட்டமன்ற தொகுதி மக்களின்
நல்ல எண்ணத்தின் அடிப்படையில், தமிழகத்திற்கு ஒரு முதலமைச்சர்
கிடைத்திருக்கின்ற காரணத்தினாலே இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 234 தொகுதி
இருந்தாலும், எடப்பாடி தொகுதியில் இருப்பவர் தான் முதலமைச்சராக இருக்கிறோம்,
இந்த முதலமைச்சரை உருவாக்கியவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்ற பொதுமக்கள்.
நீங்கள் ஓட்டுபோட்டு, சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த
காரணத்தினால்தான், இன்றைக்கு இந்த நிலையில் இருந்து உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கிறேன். 
 
மக்கள் கொடுக்கின்ற மனுக்களை நாங்கள் பதிவு செய்து
படிப்படியாக திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறோம்.
விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்திருக்கிறோம். கூட்டுப்
பண்ணை திட்டம், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் கொடுத்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்கள் உரிய விலை
கிடைக்கவேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் நல்ல விளைச்சல் ஆகின்ற பகுதிகளை
தேர்ந்தெடுக்கின்றோம். ஓமலூரூக்கும், தாரமங்கலத்திற்கும் இடையில் ஒரு இடத்தினை
தேர்வு செய்து இந்தப் பணியை துவங்க இருக்கிறோம். உற்பத்தி செய்கின்ற காய்கறி,
பழங்களை விவசாயிகள் கொண்டு சென்று அங்கேயே விற்பனை செய்யலாம், டீn-டiநே
மூலமாகவும் விற்பனை செய்யலாம், உடனடியாக பணம் கிடைக்கிறது. விவசாயிகள்
உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும்
என்பதற்காக இந்தத் திட்டத்தை துவக்கியிருக்கின்றோம். சென்னைக்கு அருகிலே
ரூ.2000 கோடியில் மிகப் பெரிய உணவுப் பூங்கா ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதன்
மூலம் நமது விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளுக்கு கட்டுப்படியான,
நியாயமான விலை கிடைக்கும்.
 
விவசாயிகள், கால்நடை வளர்ப்பை உபதொழிலாக வைத்திருக்கிறார்கள். அந்த
கால்நடை வளர்ப்பு சிறக்க வேண்டும் என்பதற்காக ஆசியாவிலேயே மிக உன்னதமான
கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க
இருக்கிறோம். அங்கே கால்நடை மருத்துவமனை, கால்நடை ஆராய்ச்சி நிலையம்
உருவாக்கி, கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்கிறோம்,
ஆடுகள், பன்றிகள், மீன், கோழிகள், வளர்த்துக் கொடுத்து, விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டுமென்பதற்காக கொடுக்கிறோம். விவசாயிகளின்
வருமானம் இரண்டு மடங்கு ஆகவேண்டும் என்பதற்காக எங்களுடைய அரசு புதிய
புதிய திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட
விரும்புகின்றேன். பால் உற்பத்தி பெருக்குவதை கருத்தில் கொண்டு, ஊட்டியில்
விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் ரூ.47.50 கோடியில் அமைக்கப்பட உள்ளது.
நம்முடைய தலைமைச் செயலாளர் நம்முடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர்,
விவசாயத்திலே அதிகமாக ஈடுபாடு உடையவர், விவசாயத் தொழில் எந்த அளவுக்கு
கடினமான தொழில் என்பது தெரியும். ஆகவே, அவர்களுக்கும், தேவையான
நன்மைகளைச் செய்வது நம்முடைய முதல் கடமை. அதேபோல கைத்தறி தொழில்
செய்பவர்களுக்கும் கடினமாக உழைத்தால் தான் அவர்களும் பணம் ஈட்ட முடியும்,
அதையும் நன்கு உணர்ந்திருக்கின்றோம். ஆகவே, விசைத்தறி, கைத்தறி, வேளாண்
தொழில் செய்கின்ற மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவது தான்
எங்களுடைய முதல் கடமை என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
நம்முடைய தலைமைச் செயலாளர் நம்முடைய மாவட்டத்தில் இருக்கின்ற
பிரச்சினைகளையெல்லாம் நன்கு உணர்ந்திருக்கின்றார், எதை எதை எப்படி
செய்யவேண்டும், எதை எதை செய்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று
அவரோடு கலந்து பேசி செயல்படுத்துவோம்.
 
அதுமட்டுமல்லாமல், அருமை சகோதரர் சத்யகோபால் அவர்கள் மிகச் சிறந்த
நிர்வாகத் திறமை படைத்தவர். கனமழை, புயல், வெள்ளம், வறட்சி என எது வந்தாலும்,
உடனடியாக தீர்வு காண்பதில் முதன்மையாக விளங்கக் கூடியவர் வருவாய் நிர்வாக
ஆணையர் அவர்கள். இதை எதற்காக சொல்கிறேனென்றால், உணர்வு பூர்வமாக இந்த நேரத்திலே பாராட்ட வேண்டும். ஏனென்றால், என்ன தான் அரசாங்கம் திட்டம்
போட்டாலும், அதை நடைமுறைப்படுத்தக் கூடியவர்கள் அதிகாரிகள். ஒரு வண்டிக்கு
இரண்டு சக்கரம் என்றால், ஒன்று அரசு, மற்றொன்று அரசு அதிகாரிகள். இந்த
இரண்டும் சரியாக இருந்தால் தான் இலக்கினை அடைய முடியும். அதனால், அரசாங்கம்
போடுகின்ற திட்டத்தை அரசு அதிகாரிகள் மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது
தான் கடமை. அந்த வகையில் திரு.அதுல்ய மிஸ்ரா அவர்களும், தலைமைச் செயலாளர்
அவர்களும், மரியாதைக்குரிய திரு.சத்யகோபால் அவர்களும் சிறந்து முறையிலே
பணியாற்றி இந்தத் திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கின்ற விதமாக அவர்கள்
செயல்படுவார்கள். அதுமட்டுமல்ல. கஜா புயல் வந்த போது கடுமையாக சேதம்
ஏற்பட்டது. அதன் அடிச்சுவடே தெரியாத அளவிற்கு அந்த இடத்தை மாற்றிவிட்டார்கள்.
 
அந்த அளவிற்கு அரசாங்கம் துரிதப்படுத்தப்பட்டு இன்றைக்கு அந்தப்
பணிகளையெல்லாம் நாங்கள் நிறைவேற்றித் தந்திருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன். கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான
நிவாரண உதவிகளை செய்து வருகின்றோம். இந்தியாவிலேயே, வறட்சிக் காலங்களில்
விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வறட்சி நிவாரணங்கள் அளித்தல், பயிர்க்
காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுத்தல் என
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதும் அம்மாவின் அரசு தான்.
நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்த ஆட்சி 10 நாள் தாக்குப் பிடிக்குமா? ஒரு
மாதம் தாக்குப் பிடிக்குமா? 6 மாதம் தாக்குப் பிடிக்குமா? என்று சொன்னார்கள்.
இரண்டாண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு வெற்றிகரமாக நடந்து
கொண்டிருக்கின்றது. இதற்கு முழுக் காரணம் மக்களும், அதிகாரிகளும் தான்.
உங்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த ஆட்சி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்துத் திட்டங்களும் வெற்றிகரமாக
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதற்கு உங்களுடைய ஆதரவும் அன்பும் தான்
காரணம்.
 
நகரத்தில் வாழ்கின்ற மக்களுக்கும் தேவையான திட்டங்களை வழங்கிக்
கொண்டிருக்கின்றோம். பேரூராட்சி, நகராட்சி என அனைத்துப் பகுதிகளுக்கும் வீடு
கட்டும் திட்டத்தின் மூலமாக மத்திய,மாநில அரசுகள் இணைந்து, வறுமைக்கோட்டிற்குக்
கீழ் வாழும் வீடில்லா மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றோம். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும். வீட்டுமனை
இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் வீட்டு மனை வழங்குவதற்கு அம்மாவின் அரசு
நடவடிக்கை எடுக்கும். வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோர்களுக்கு
முதியோர் உதவித் திட்டத்தை அம்மாவின் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இதன் மூலம், புதிதாக, தகுதியான 5 இலட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம்
வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும். காப்பீட்டுத்
திட்டம் இல்லாதவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர். ஏழை, எளிய மக்கள்
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு, இதயதெய்வம் புரட்சித் தலைவி
அம்மா அவர்கள் காலத்தில் ரூபாய் 2 இலட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகை
தற்பொழுது ரூபாய் 5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
ஆகவே, மக்களுக்குத் தேவையான, மருத்துவ வசதி, விவசாயிகளுக்குத்
தேவையான உதவிகள், குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம் கொடுத்துக்
கொண்டிருக்கின்றோம். உணவு தானிய உற்பத்தியில் தொடர்ச்சியாக கிருஷி கர்மான்
விருது பெற்றுக் கொண்டிருக்கின்றோம். இது போன்ற காரணங்களினால், விவசாயம் மேம்படுகிறது, தொழில் வளம் பெருகுகின்றது, கைத்தறி, விசைத்தறி நெசவுத் தொழில்
சிறந்து விளங்குகின்றது. எனவே, மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும்
அம்மாவின் அரசு செய்து கொண்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்து, இந்த
நிகழ்ச்சியை குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும்,
வருகை புரிந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்". இவ்வாறு முதல்வர் உரையாற்றினார்.
 

 


English Summary
Edapadi palanisamy speech in salem

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...