அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7%க்கும் அதிகமாக இருக்கும்: தலைமைப் பொருளாதார ஆலோசகர்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   21 , 2022  10:24:46 IST

கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 
 
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, கொரோனா பரவல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் போன்றவைகளால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இவை வளர்ச்சியைப் பாதிக்கின்றன. 
 
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் இதன் மறுமதிப்பீடு இறங்குமுகமாக இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் பொருளாதார வளர்ச்சி குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு தற்போது சரிந்துள்ளது. 
 
அதன்படி, 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். மேலும் 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாகத் தக்கவைக்கும் வகையில், இந்தியா நல்ல நிலையில் உள்ளது எனக் கூறினார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...