???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.39 கோடி பறிமுதல்

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   14 , 2019  23:14:36 IST

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தலின்போது பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மங்கள்ராம் என்பவரை சோதனையிட்டனர். அவரிடம் கணக்கில் வராத 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
இதேபோல், நாமக்கல் முதலைபட்டி சாலையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவிலிருந்து நாமக்கல் நோக்கி வந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...