???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு 0 ஒன்றுமே செய்யவில்லையா?- சுப.வீரபாண்டியன் 0 நினைப்பும் நிஜமும்! - மாலன் 0 தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா 0 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று 0 ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் 0 எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி! 0 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 0 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' 0 செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு! 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   04 , 2020  00:52:55 IST

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கட்டணம் செலுத்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், தாழ்வழுத்த நுகர்வோர் மின்கட்டணம் செலுத்த ஜூன் 15-க்கு பிறகு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 5 வரை மின்கட்டணம் செலுத்த ஏற்கனவே அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள அனைத்து உயரழுத்த நுகர்வோர்களை பொருத்தவரை (HT) தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் துண்டிப்பிற்கான உரிமையை விட்டு கொடுத்ததினால் பிப்ரவரி 2020, மார்ச் 2020, ஏப்ரல் 2020 மாதத்திற்கான மின்கட்டணத்தை முறையே 03/2020, 4/2020 மற்றும் 5/2020-ல் செலுத்தாமல்
இருப்பின் அந்த உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் தங்களது கட்டணத்தை 15.06.2020-க்குள் செலுத்தலாம். அவர்களுக்கு மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

மே 2020 மாத உயர் மின்னழுத்த மின் கட்டணத்தை நுகர்வோர்கள் அந்த மாதத்திற்கான குறிப்பிட்ட கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...