???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி 0 கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர் 0 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசு அறிவிப்பு 0 ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு 0 அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு 0 தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: மத்திய அரசு 0 செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு! 0 'மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நான் மறைந்த பிறகும்.... - துரைமுருகன் உருக்கம்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   09 , 2020  09:10:00 IST


Andhimazhai Image

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மின்னலைபோல் துரைமுருகன் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்கிறார் என மு.க. ஸ்டாலின் கூறினார். அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும், டி.ஆர். பாலு பொருளாளராகவும் தேர்ந்தெடுப்பட்டனர். அப்போது பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், "உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம் அப்போது சுப்பு, துரைமுருகன், ரகுமான்கான் ஆகியோர் தமிழகம் முழுவதும் உலா வந்தார்கள். நமது தலைவர் கலைஞர் தான் அப்போதைய சட்டமன்ற அராஜகங்கள் பற்றி 'இடி, மின்னல், மழை' என்ற தலைப்பில் பேசுமாறு அனுப்பிவைத்தார். அதில் அண்ணன் துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட தலைப்பு மின்னல். மின்னல் என்பது வான்மண்டலத்தில் நொடி பொழுதில் தோன்றி மறையக்கூடியது. அவ்வாறு 50 வருடங்களாக அண்ணன் துரைமுருகன் அவர்கள் கழகத்திற்குள் ஒளிப்பாய்ச்சிக்கொண்டே இருக்கிறார். அவர் இருக்கும் இடம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். எப்போதும் கலகலப்பாக இருப்பார். அனைவராலும் மதிக்கக்கூடியவர். அனைவரது விருப்பத்திற்கு ஏற்றவகையிலே பணியாற்றக்கூடியவர்.

குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் சரி, வாழ்க்கைப் பிரச்சனையாக இருந்தாலும் சரி தனிப்பட்ட முறையில் எனக்கு ஊன்றுகோலாகவும், உற்ற துணையாக இருக்கக் கூடியவர் எனது ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களை வாழ்த்துகிறேன், போற்றுகிறேன், தம்பி என்ற முறையிலே உங்களை வணங்குகிறேன்" என்று கூறினார்.

இதன்பிறகு உரையாற்றிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், "எங்கோ இருந்து வந்த என்னை வளர்த்து எல்லா பதவிகளையும் வழங்கியவர் தலைவர் கலைஞர். என் வாழ்நாளில் எப்போதும் அவருக்கு நான் நன்றியுடன் இருந்தேன். தளபதி உங்களை நான் சிறிய வயதிலிருந்து அறிவேன், நீங்களும் அறிவீர்கள். "நான் அண்ணாவை நம்பி கழகத்திற்கு வந்தவன். என் தலைவர் கலைஞர், என் கட்சி திமுக" என எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

திமுகவை நினைக்கும்போது எனக்கு இமையமே தூசாகத்தான் தெரியும்.  நான் மறைந்தபோன பிறகும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் உறுதுணையாக இருப்பார்கள் என தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய கலாச்சார படையெடுப்பால் இந்த இயக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை மத்தியில் இருந்தவர்கள் கொஞ்சம் ஜனநாயகம் தெரிந்தவர்கள். இப்பொழுது நம்மை எதிர்ப்பவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். சட்டத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள். இந்தியை திணிப்போம் சம்ஸ்கிருதத்தை கொண்டுவருவோம் எங்களை யாரும் எதிர்க்க முடியாதுயென ஆக்ரோஷமாக வருகிறார்கள். இதனை எதிர்க்கும் வலிமையை நமது தலைவர் பெறவேண்டும். நமது தலைவர் பெற வேண்டுமென்றால் அந்த வலிமையை நாம் பெற வேண்டும். ஒரே மொழி, ஒரே இனம், ஒரே நாடு என வந்தால் திராவிட இனம் பட்டுபோய்விடும், நம் மொழி அழிந்துவிடும். இதனை எதிரக்க இளையதலைமுறை வரவேண்டும், உதயநிதியின் பட்டாளத்தில் இருந்துதான் அவர்களை பெற வேண்டும்" என்று கூறினார். click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...