???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆடுகளுக்குமா வயக்ரா கொடுப்பீங்க? – 750 டன் வயக்ராவை ஆற்றில் கலந்த நிறுவனம்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   11 , 2019  03:04:02 IST


Andhimazhai Image

மைக்கேல் மார்பி அயர்லாந்தைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவர். இவரது மந்தையில் இருந்த செம்மறி ஆடுகள் கடந்த வாரம் திடீரென்று வித்தியாசமாகவும், பாலியல் ரீதியாக தீவிரமாகவும் இருந்துள்ளன. இவருக்கு என்னவோ நடந்துள்ளது என்று தோன்றியது. கிடா ஆடுகள் சதா பெட்டை ஆடுகளை தீவிரத்துடன் துரத்திக்கொண்டே இருந்தன. இவருடைய மந்தையில் மட்டுமல்ல. பக்கத்தில் உள்ள பண்ணைகளிலும் இதே நிலை! சில இடங்களில் மாடுகளும் அப்படி நடந்துகொண்டன.

 

ஆடுகள் ஏன் பாலியல் ரீதியாக இவ்வளவு முனைப்புடன் காணப்படுகின்றன என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை., மைக்கெல் மார்பி இவை ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அவர் நினைத்தார். ஆனால், மாடுகளைவிட ஆடுகள் அதிகமாக இப்படி நடந்துகொண்டது அவரை இன்னும் குழப்பமடைய செய்தது. இவை அனைத்தும் அங்கே ஓடும் ஆற்றில் தண்ணீர் குடிப்பவை. அதன் பக்கமாக ஃபைஸர் மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

 

இவருக்கு அந்த ஃபைஸர் (Pfizer) மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது சந்தேகம் எழுந்தது. அனைவரும் புகார் செய்தனர். ஃபைஸர் நிறுவனம் இதுகுறித்து ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் மருந்து தொழிற்சாலையிலிருந்து சுமார் 755 டன் சுத்திகரிக்கப்படாத வயக்ரா மருந்து ஆற்றில் கலந்தது தெரியவந்தது. இதனால்தான் பெரும்பான்மையான ஆடுகளும், இதர கால்நடைகளும் இனச்சேர்க்கை முனைப்புடன் தவித்திருக்கின்றன. உடனடியாக குறித்த மருந்து ஆற்றில் கலப்பது தடுத்து நிறுத்தபட்டது. ஆடுகள் ஒருவாரத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பியிருக்கின்றன.

 

ஃபைஸர் தொழிற்சாலையால் இப்படி பாதிப்பு ஏற்படுவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2017-இல் இந்த தொழிற்சாலையால் அருகில் உள்ள இன்னொரு கிராமத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது பிரச்சனை சரி செய்யப்பட்டிருந்தாலும், அங்குள்ள மக்கள் ஃபைஸர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

நல்லவேளை இந்த மருந்து ஆடுகள் குடித்த தண்ணீரில் கலந்துச்சு… என்று மைக்கேல் மார்பி உள்ளிட்ட ஆட்டுக்காரர்கள் ஒரு பக்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டுள்ளனர்…click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...