![]() |
டிராகன் பழத்துக்கு 'தாமரை' பெயர்சூட்டிய :குஜராத் முதலமைச்சர்Posted : புதன்கிழமை, ஜனவரி 20 , 2021 11:08:16 IST
டிராகன் பழத்திற்கு தாமரை என்று மாற்றம் செய்து குஜராத் முதலமைச்சர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிராகன் பழத்திற்கு மறுபெயர் வைக்க குஜராத் அரசு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில்,
டிராகன் பழத்தின் வெளித்தோற்றம் பார்ப்பதற்கு அச்சு அசலாக தாமரை மலர் போன்று
இருப்பதாககூறி, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அதற்கு கமலம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். சமஸ்கிருதத்தில் கமலம் என்றால் தாமரை என்று பொருள்படும் என விஜய் ரூபானி விளக்கம் அளித்துள்ளார். பாஜகவின் சின்னமான தாமரையை மக்கள் மத்தியில் பதிய வைப்பதற்காக இந்த பழத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
|
|