???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேர்தல் ஆணைய தூதர் டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   14 , 2019  23:22:28 IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் தூதராக இருக்கிறார். இவர், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என மக்களைக் கேட்டுகொண்டுள்ளார். அத்துடன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
 
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை அளிக்கக்கோரிய அவரே வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகரில் வசித்து வந்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆர்.எம்.வி தொகுதிக்கு உட்பட்ட அஸ்வந்த் நகர் பகுதிக்கு அவர் மாறினார்.
 
இந்திரா நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படுவதற்கான ஆவணங்கள் டிராவிட்டின் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.எம்.வி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பதற்கான ஆவணங்களை அவர்கள் சமர்பிக்கவில்லை என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து டிராவிட்டின் பெயர் நீக்கப்பட்டதால், இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத் தூதரே வாக்களிக்க முடியாதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...