???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன்? ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி 0 தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் 0 பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் 0 ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் 0 கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போர்க் குற்றவாளி ராஜபக்சேவை காப்பாற்ற இந்தியா முயற்சிக்க கூடாது - ராமதாஸ்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   26 , 2013  04:36:10 IST

ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி என்று அறிவிக்க கோரியும், ஐ.நா  சபையில்  ராஜபக்சேக்கு எதிராக வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க  வலியுறுத்தியும்  சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, துணை தலைவர் கே.என்.சேகர், பொருளாளர் அக்பர் சையது, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசிய போது  “ உலகில் வேறு எங்கும் நடந்திராத இனப்படுகொலை இலங்கையில் நடத்தபட்டு உள்ளது. போர் குற்றவாளியான ராஜபக்சேவை காப்பாற்ற இந்திய அரசு முயற்சிக்கக் கூடாது. சர்வதேச அளவில் அவர் மீது விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. சபையில் இந்தியாவே கொண்டு வர வேண்டும்.  தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிக கொடூரமாக கொல்லப்பட்ட காட்சி எல்லோரையும் பதற வைக்கிறது.

 

இதே போல் தடை செய்யப்பட்ட போர் முறை உலகில் எங்கும் அரங்கேற்றபட்டதில்லை. ராஜபக்சே போர் குற்றவாளி என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வெளி வந்துள்ளன. எனவே தான் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க இன்று பல நாடுகள் முன் வந்து உள்ளன. சரண் அடைய சென்ற விடுதலைப் புலிகளை நிராயுத பாணிகளாக இருந்த அவர்களை கொன்றது, தமிழ் கர்ப்பிணி பெண்களை இரக்கமின்றி துடிதுடிக்க வைத்து கொன்றது இப்படி எவ்வளவோ கொடுமைகள் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இது சர்வதேச அளவில் ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி என்பதை நிரூபித்து உள்ளது. எனவே ஐ.நா. மன்றத்தில் ராஜபக்சேக்கு எதிராக வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். என்றார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...