ரஜினிகாந்த் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி, தனது தந்தை முரசொலி மாறனிடம் பணியாற்றியதாக வெளியானது பொய்யான தகவல் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள பதிவில், "ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள திரு அர்ஜுனமூர்த்தி, எனது தந்தை மறைந்த திரு முரசொலி மாறன் அவர்களின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தியை வெளியிடப்பட்டிருக்கிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல். அதுபோல் யாரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.