???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விளையாட்டில் தோற்கடித்த மனைவியின் முதுகெலும்பை முறித்த கணவன்!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   27 , 2020  08:49:51 IST


Andhimazhai Image
 குஜராத்தில் உள்ள வடோதராவில் லூடோ என்னும் ஆன்லைன் விளையாட்டில் தன்னைத் தோற்கடித்த மனைவியை அடித்து முதுகெலும்பை முறித்துள்ளார் ஒரு கணவர். மனைவியிடம் தோற்பதை அவரது ஈகோ ஏற்காததால் இந்த சம்பவம் நடந்ததுள்ளது.
 
வடோதராவில் ஒரு குடியிருப்பில் இந்த தம்பதியினர் வாழ்ந்துவந்துள்ளனர். கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மனைவி டியூஷன் எடுத்து சம்பாதித்தார். இந்த ஊரடங்கு காலத்தில் கணவர் வெளியே போய் சக குடியிருப்புவாசிகளுடன் பேசிப் பொழுதைக் கழிப்பதைத் தவிர்க்க நினைத்தார் மனைவி. எனவே ஆன்லைன் லூடோ விளையாடலாம் என அழைத்தார். அந்த விளையாட்டில் இருவருக்கும் முட்டிக்கொண்டது. தொடர்ந்து மூன்றுமுறை கணவரைத் தோற்கடித்தார். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. கணவன் கோபமாகி அடித்ததில் முதுகெலும்பு விலகிவிட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்து மருத்துவம் செய்தார்.
 
இந்நிலையில் மனைவி அம்மா வீட்டுக்குப் போகிறேன் என்று மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் பெண்களுக்கான அரசு ஆலோசனை மையத்திலும் அவர் புகார் செய்தார். அம்மையத்தைச் சேர்ந்த ஆலோசகர்கள் கணவன் மனைவி இருவரிடமும் அறிவுரைகள் கூறினர். அதன் பின்னர் கணவன் மீது புகார் கொடுக்குமாறு மனைவியிடம் கேட்டனர். அவரிடம் கணவன் மன்னிப்புக் கேட்டுவிட்டதால் புகார் கொடுக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். திருமண வாழ்வில் ஏற்பட்ட இந்த பிரச்னையை பொருட்படுத்தாமல் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறப்பட்டது. இருப்பினும் சில நாட்கள் பெற்றோரும் போய் இருந்துவிட்டு திரும்பிவருவதாக மனைவி கிளம்பிச் சென்றுவிட்டார். 
 
இப்போதைக்கு ஈகோ பிடித்த கணவன் தனிமையில் கிடக்கிறார். லூடோ விளையாட்டைக் குற்றம் சொல்வதா? மனிதனின் ஈகோவைக் குற்றம் சொல்வதா?
 
கொரோனா காலத்தில் குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாக செயல்பாட்டாளர்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதொடர்பாக புகார்களும் வந்துகொண்டுள்ளன. மேலே சொன்னதுபோல் எத்தனை பிரச்னைகளோ?


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...