![]() |
இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு விமான சேவை ரத்துPosted : செவ்வாய்க்கிழமை, மார்ச் 24 , 2020 08:27:50 IST
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கும் 400-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதுடன், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் நோய் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா வரும் சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
|
|