???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனாவைக் கண்டறியும் மோப்ப நாய்கள்!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   22 , 2020  07:46:07 IST


Andhimazhai Image
 
நீங்கள் ஒரு விமானநிலையத்தில் சென்று இறங்குகிறீர்கள். சோதனை சாவடியில் ஓர் நாய் இருக்கிறது. ஓடிவந்து உங்களை முகர்கிறது..  உங்களுக்கு கொரோனா இருக்குமானால் நீங்கள் அந்த நாய் அளிக்கும் அறிக்கையின்படி உடனே தனிமைப்படுத்தப் படுவீர்கள். எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும்கூட கொரோனா வைரஸை அந்த நாய் கண்டுபிடித்துவிடுகிறது.
 
கற்பனைதானே என்று நினைக்கவேண்டாம். பிரிட்டனில் கொரொனோ நோயாளிகளைக் கண்டறிவதற்காக நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆய்வுகள் வேகமாக நடக்கின்றன. விரைவில் இது உண்மையாகக் கூடும். எந்த ஒரு நோய் மனித உடலைத் தாக்கும்போதும் அதற்கேற்ப உடலின் வாசனைகள் மாறுபடுகின்றன. இந்த வாசனைகள் ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியாக இருக்கும்.
 
மலேரியா நோய் தாக்கி அதன் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருப்பவர்கள் உண்டு. ஆனால் இவர்கள் பிறருக்கு அதைப் பரப்புபவர்களாக இருப்பார்கள். இந்த மாதிரி ஆட்களைக்கண்டு பிடித்து அவர்களுக்கு மருத்துவம் பார்த்தால் பரவலைத் தடுக்கமுடியும் என்று லண்டனில் ஆய்வாளர்கள் நாய்களை வைத்து மலேரியாவின் வாசனையை முகர்ந்து ஆளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
 
 
நாய்களின் மோப்ப சக்தி மனிதனுடன் ஒப்பிடும்போது ஒரு வாசனையை நம்மை விட 10,000- 1,00000 மடங்கு அதிகமாகக் கண்டுபிடித்துவிடும் சக்தி வாய்ந்தவை. இ தை வைத்துத்தான் வெடிமருந்துகள் போதை மருந்துகள் கடத்தலைத் தடுக்க பயிற்சி பெற்ற நாய்களை காவல்துறையினர் உலகெங்கும் பயன்படுத்துகிறார்கள். இதே முறைதான் நோய் வாசனையைக் கண்டறியவும் பயன்படுகிறது.
 
 
கான்சரைக் கூட நாய்கள் மோப்ப சக்தியில் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்கின்றன. இதே கொரோனா ஆய்வில் ஈடுபட்டிருக்கும் பெண் ஆய்வாளர் ஒருவரின் செல்ல நாய் அவரது மார்பகத்தில் உருவான சிறிய புற்றுநோய்க் கட்டியை பற்றி எச்சரிக்கை செய்தது. அதை வைத்தே அவர் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். அவற்றின் நுண்மையான மோப்ப சக்தி, இதுபோன்ற பல நோய்களைக் கண்டறியவும் பயன்படுத்தப்படும் என்ற தீவிர ஆய்வில் அவர் ஈடுபட்டுள்ளார் என கார்டியன் இணைய தளத்தில் வெளியாகி இருக்கும் கட்டுரை ஒன்று விளக்குகிறது.
 
கொரோனா பரவல் ஆரம்பித்ததும் மலேரியா ஆய்வில் இருந்த ஆய்வாளர்கள், முதலில் கொரோனாவுக்கு நாய்களைப் பயன்படுத்துவோம் என அவற்றுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தனர். பிரிட்டன் அரசு இதற்காக ஐந்து லட்சம் பவுண்டுகளை ஒதுக்கியும் உள்ளது.
இன்னும் ஓரிரு மாதத்தில் கொரோனா நோயாளிகளை அவர்கள் அறிகுறி இல்லாதபோதும் கண்டுபிடித்துவிட பயிற்சி பெற்ற நாய்களின் படை உருவாக்கப்படும்.
 
 
ஆகவே விமான நிலையங்களில் எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதைத் தவிர்த்துவிட்டு நாய்கள் யாரைச் சுட்டிக்காட்டுகின்றனவோ அவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்தால் போதும். 
 
 
எதிர்காலத்தில் நாய்கள் இனத்தின் இந்த மோப்பத் திறனை செயற்கை நுண்ணறிவு முறையில் செல்போன்களிலும் கொண்டுவந்து, நோய்களை அறியலாம் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...