தமிழகத்தில் இன்றுடன் ஓய்வு பெறவிருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதே போல, மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் இரண்டு மாதங்கள் பணி தொடர தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் பொதுநலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.