???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உடலைக்கூட அடக்கம் செய்யவிடவில்லையே! மருத்துவ சமூகத்தின் துயரம்!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   20 , 2020  09:28:18 IST


Andhimazhai Image
 
 
சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள நியூஹோப் மருத்துவமனையை பலர் பார்த்திருக்கலாம். அதை நிறுவிய நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ்(56) கொரோனாவுக்கு சமீபத்தில் பலியாகி இருப்பது துயரம்.
 
 நரம்பு தொடர்பான அறுவை சிகிச்சைகளைச் செய்யக்கூடிய நிபுணர் அவர். வெளிநாட்டிலிருந்தும் அவரிடம் வந்து சிகிச்சை பெறுவர். அதில் ஒரு நோயாளி மூலம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
இவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது கீழ்ப்பாக்கத்தில் பொதுமக்கள் கூடி, அந்த ஆம்புலன்சைத் தாக்கி, உடலை அடக்கம் செய்யவிடாமல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே ஆந்திர மருத்துவர் ஒருவரது உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பகுதியில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. டெங்குவால் இறந்த மருத்துவர் ஜெயமோகன் உடலை ஊருக்கு கொண்டுவர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
சைமன் உடலை அடக்கம் செய்ய உடன் சென்றவர்கள் கூட தாக்குதலுக்குத்தப்ப வில்லை. பின்னர் போலீஸ் உதவியுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
“ஏழு பேர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். சைமனது உடலைக்கூட சரியாக அடக்கம் செய்யாவிட்டால் அவரது ஆத்மா சாந்தி அடையுமா? இந்த மருத்துவத் தொழிலுக்கு ஏன் வந்தோம் என்று நினைக்கத் தோன்றுகிறது” என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார் மருத்துவர் சைமன் உடலைக் கொண்டு சென்றவர்களில் ஒருவரான மருத்துவர் பாக்யராஜ்.
 
“உங்களில் யாருக்குவேண்டுமானாலும் இது வரலாம். உங்கள் மனைவியோ குழந்தையோ பெற்றோரோ யாருமே உங்களைத் தொடக்கூட  மாட்டார்கள். ஆனால் மருத்துவர்களாகிய நாங்கள் தான் உங்களைக் கவனிக்கொள்ள, சிகிச்சை அளிக்கவேண்டும். ஆனால் ஒரு சமூகமாக நீங்கள் எங்களுக்கு இப்படித்தான் திருப்பித் தருகிறீர்கள்” என்பது இன்னொரு மருத்துவரான ப்ரதீப் குமாரின் பதிவு.
 
கொரோனா இறந்த உடல்வழியாகப் பரவ வாய்ப்பில்லை என்பது தொடர்பாக பொதுமக்களிட்ம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்கிறார்கள். ஆனால் இறந்தவரின் உடலைக்கூட தம் பகுதியில் அடக்கம் செய்யவிடாத அதுவும் மருத்துவரின் உடலைக்கூட அனுமதிக்காத பொதுமக்கள் மனநிலையைப் புரிந்துகொள்வது எப்படி?
 
 சைமனின் மகளும் மருத்துவரே. அவருக்கு கோவிட் பாஸிட்டிவ். அவரால் தன் இறந்த தந்தையின் உடலைக் கூட இறுதியாகப் பார்க்க முடியவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். சைமனின் மனைவியும் மகனும் அவரது உடலை கண்ணாடி ஜன்னல் வழியாகத்தான் பார்க்க முடிந்தது.
 
சாதாரண குடும்பத்தில் பிறந்து ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் பயின்று, முதுகலை அறுவை சிகிச்சைப் பட்டம் பெற்று, எப் ஆர் சி எஸ் தேர்வாகி, சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்து மருத்துவமனை தொடங்கியவர் சைமன்.
 
கொரோனாவின் தாக்குதலுக்கு முதல் களப்பலியாகத் தயாராக முன்னிலையில் நிற்பவர்கள் நம்முடைய மருத்துவர்களே. ஆனால் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகையில் கூட கல்லெறிபவர்களாக இந்த சமூகம் இந்த தொற்றுக்காலத்தில் மாறிவிட்டது.
கொரோனாவால் மரணமடைகிறவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இனி எல்லா இடங்களிலும் காவல்துறை வரவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதி மருத்துவர்கள் கருப்புதினம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளனர். பாதுகாப்புக் கவசங்கள் இன்றி, போர்க்களத்தில் வெறுங்கையுடன் நிற்கும் மருத்துவப் பணியாளர்களுக்காக கைத்தட்டியதெல்லாம்  வெறும் நடிப்பா எனக் கேட்கத் தோன்றுகிறது.
 
ரட்சிப்பவர்களை 
சிலுவைப்பாதையில் 
கல்லெறியும் பழக்கம்
 எவ்வளவு பழையது
-என்கிற மனுஷ்ய புத்திரனின்  இச்சம்பவம் தொடர்பான கவிதை வரிகள் ஆழமாக மனதைப் பிசைகின்றன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...