அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மூதாட்டி வீட்டின் முன் சிறுநீர் கழித்தவர் எய்ம்ஸ் மருத்துவர் குழுவில் சேர்ப்பு - வலுக்கும் எதிர்ப்பு

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   28 , 2020  12:38:19 IST

மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர் குழுவில், சென்னை மூதாட்டியின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்துகொண்ட மருத்துவர் சண்முகம் சுப்பையாவும் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.

 

மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல்நாட்டப்பட்ட நிலையில், அதன் தலைவராக வி.எம். கடோச் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இவரோடு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

 

அதில் மருத்துவர்கள் பங்கஜ் ராகவ், வனஜாக்‌ஷம்மா, பிரசாந்த் லாவனியா மற்றும் சண்முகம் சுப்பையா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் இடம்பெற்றுள்ள சண்முகம் சுப்பையா, சென்னையில் மூதாட்டியின் வீட்டின் முன்பு வேண்டுமென்ற சிறுநீர் கழித்து இழிவான செயலில் ஈடுபட்ட விவகாரத்தில் சிக்கியவராவார். இதுதொடர்பில் சண்முகம் சுப்பையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் குழுவில் சண்முகம் சுப்பையா இடம்பெற்றிருப்பதற்கு விசிக எம்.பி ரவிக்குமார், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், திமுகவை சேர்ந்த ஏ.பி. தியாகராஜன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...