???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மக்களவையில் பெரும்பான்மை இருக்கலாம்; மக்களிடம் இல்லை: மம்தா பானர்ஜி 0 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் 0 பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் 0 லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸ் வேண்டுகோள் 0 நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் விமர்சனம் 0 50 வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகிய இந்திய விமான படையின் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு 0 ஒப்பந்ததாரர் வீடுகளில் ரெய்டு நிறைவு: ரூ.450 கோடி வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கின! 0 புக்கெட்டுக்குப் போட்ட டிக்கெட்! - குட்வில் மோகன் 0 மக்களவையில் பிரதமரை ஆரத்தழுவி ராகுல் காந்தி நாடகம்: தமிழிசை காட்டம் 0 நம்பிக்கையில்லா தீர்மானம் காங்கிரசால் திணிக்கப்பட்டது: பிரதமர் குற்றச்சாட்டு 0 ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு 0 ஐந்து தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 0 ராகுல்காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம்: பாஜக அறிவிப்பு 0 நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் மக்களைச் சந்திப்பேன்: சீமான் பேட்டி 0 பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகஅரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   03 , 2013  22:55:23 IST


Andhimazhai Image

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் “தமிழ்நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையாக உயர்ந்துள்ளது. பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பெட்ரோல்  மற்றும் டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அன்றாட உணவுக்கு தேவையான பொருட்களின் விலை உயர்வை தாங்கிக்கொள்ள முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதால் ஒரு நாளைக்கு 2 வேளை உணவு கூட சாப்பிட முடியாத அவல நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

 

சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதால் அரிசிக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன்விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டீசல் விலை மாதம் தோறும் உயர்த்தப்படவிருப்பதால் காய்கறி உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளிச்சந்தையில் விற்கப்படுவதற்கு இணையான தரம் கொண்ட அரிசியை நியாயவிலை கடைகள் மூலம் மானிய விலையில் விற்பனை செய்யவும், குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் பாமாயிலின் அளவை இரு மடங்காக உயர்த்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.  click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...