அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டாக்டர்: திரை விமர்சனம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   12 , 2021  12:28:57 IST


Andhimazhai Image

ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றும் டாக்டர் வருண் (சிவகார்த்திகேயன்) ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிக்கக் கூடியவர். இவரின் குணத்தின் மீது நாயகி பத்மினிக்கு(பிரியங்கா அருள்மோகன்) எந்த ஈர்ப்பும் இல்லாமல் போவதால், நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணத்தை இருவீட்டாரின் சம்மதத்துடன் நிறுத்தி விடுகிறார்.


இந்நிலையில் பத்மினியின் அண்ணன் மகள் காணாமல் போகிறார். பத்மினியின் குடும்பத்துடன் சேர்ந்து குழந்தையைத் தேடத் தொடங்கும் மருத்துவர் வருண்  கடைசியில் குழந்தையை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


தொடக்கத்தில் படம் சீரியசாக தொடங்கினாலும், விரைவிலேயே பிளாக் காமெடிக்கு பஞ்சமில்லாத படமாக மாறிவிடுகிறது.  படத்தின் முழு பலமும் பிளாக் காமெடி தான். படத்தில் சிவகார்த்திகேயனின் வழக்கமான துள்ளல், நையாண்டி அனல் பறக்கும் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.


யோகி பாபு, ரெடின், சுனில், தீபா போன்ற கதாபாத்திரங்கள் படத்தின் பலம். ரெடினின் சத்தமான பேச்சு, யோகிபாபு கையைத் தட்டிவிட்டு விளையாடுவது, தீபாவின் வெகுளித்தனமான நடிப்பு, ரயில் சண்டை காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.


குழந்தை கடத்தல் கும்பலின் தலைவனாக வரும் வினய் நடிப்பில் மிரட்டுகிறார்.  அவரின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் அசத்தல்.


அனிருத் இசையில் ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் ஏற்கனவே ஹிட்டாகி இருந்ததால், பாடலை வைப்பதற்காகவே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நீட்டித்திருக்கிறார். படத்தின் பின்னணி இசை இறுதிக் காட்சிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக இருக்கின்றது.

 

படத்தை நாயகனின் படமாக இல்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். திரைக்கதையில் விறுவிறுப்பு. கதாபாத்திரங்களின் தேர்வு படத்திற்கு மிகப் பெரிய பலம்.


கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவால் அசத்தியிருக்கிறார். பாடல் காட்சிகள், ரயில் சண்டை, கோவா என எல்லாவற்றையும் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்.


படத்தில் பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸாகியிருந்தாலும் நகைச்சுவையால் அவற்றையெல்லாம் கடந்து சிரிக்க வைக்கிறது டாக்டர்.

 

 


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...