???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரானா வைரஸ்: முதலில் எச்சரித்த மருத்துவர் மரணம்!

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   07 , 2020  05:33:58 IST


Andhimazhai Image
கொரானா வைரஸ் தாக்குதல் பற்றி முதன்முதலில் எச்சரிக்கை செய்த மருத்துவர் அதே நோய்க்குப் பலியாகி இருப்பது சீனர்களை மட்டுமல்லாமல் உலகில் பலரையும் பெரும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தி உள்ளது.
 
சீனாவில் கொரானா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது அங்கு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வூஹான் நகரைச் சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் என்பவர் முதன் முதலில் எச்சரிக்கை செய்தார். இந்த வைரஸ் முன்பு சார்ஸ் வைரஸ் போல கொடிய புதிய விதமான தாக்குதலாக இருக்கலாம் என்று அவர் மருத்துவர்களும் தன் வகுப்புத் தோழர்களும் அடங்கிய ஒரு இணைய உரையாடல் தளத்தில் கருத்து தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து சீன காவல் துறை நடு இரவில் இவரை அழைத்துக்கொண்டுபோய் தவறான சமூகத்துக்குப் பீதி விளைவிக்கும் தகவலைப் பரப்புவதற்காக கண்டனம் தெரிவித்தது. அரசு மூத்த மருத்துவர்களும் இவரை விசாரித்து தன்னுடைய தகவல் ஆதாரமற்றது என்று எழுதும்படி வற்புறுத்தினார்கள்.
 
இந்த வைரஸ் பரவலை ரகசியமாக வைக்கவே சீன அரசாங்கம் ஆரம்பத்தில் விரும்பியது. லி வென்லியாங் போன்ற மருத்துவர்கள் வெளிப்படையாக எச்சரிக்கை விடுப்பதை அது விரும்பவில்லை.
 
இவர் அதுவரை வூஹானில் அவ்வளவாகப் புகழ்பெறாத கண் மருத்துவராக இருந்தார். இந்த பிரச்னைக்குப் பிறகு அவர் துணிச்சலாகப் பேசியவர் என்று மக்களால் அறியப்பட்டிருந்தார்.
 
ஒரு கட்டத்தில் இறப்பு விகிதம் அதிகமானபின்னர், சீனா கொரானா வைரஸ் தாக்குதலை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
 
துரதிருஷ்ட வசமாக இந்த எச்சரிக்கையை முதலில் விடுத்த இந்த மருத்துவர் இதே நோய்க்கு நேற்று பலியாகிவிட்டார்.  இவரது வயது 34.
 
இப்போது வரை 600க்கும் மேற்பட்டோர் அங்கு இறந்துள்ளனர். உலகின் பல பகுதிகளில் இந்த தாக்குதல் பரவ ஆரம்பித்துள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...