???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை 0 ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப், மகள் மர்யம் நவாஸின் ஜாமின் மனு நிராகரிப்பு 0 எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை! 0 ஓரினச் சேர்க்கைக்கு எதிரான குற்றப்பிரிவு சட்டத்தை நீக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! 0 உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே 0 ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் 0 புலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 தென்மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 0 பினாமி வீடுகளில் வருமானவரி சோதனை: முதலமைச்சர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 18 பேர் கைது 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது! 0 நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன: குலாம்நபி ஆசாத் 0 46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்து பாஸ்போர்ட் பெறுகிறார்கள்: ஆய்வில் தகவல் 0 ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

செப்.15-ஆம் தேதி முதல் திமுகவின் முப்பெரும் விழா!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   14 , 2017  02:11:06 IST

திமுகவின் முப்பெரும் விழா வருகிற 15ஆம் தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பிறந்த நாள், பெரியாரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 15ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக அண்ணா சிலைக்கு மாலையணிவிக்க உள்ளேன். 16ஆம் தேதி திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் முப்பெரும் விழாப் பொதுக்கூட்டம் நடைபெறும். செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிக்க உள்ளேன். அரசியல் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மாநிலங்களை அடிமைப்படுத்துவதில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது, அதை எதிர்க்கத் துணிவின்றி மாநில அரசு இருக்கிறது. இந்த நிலை மாறாமல் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சியையும் மீட்க முடியாது. அதற்கான மாற்றத்துக்கு களமாக திமுகவின் முப்பெரும் விழா அமையும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...