???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட திமுக அழுத்தம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   12 , 2019  05:46:31 IST

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
"உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் ஏககாலத்தில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று (12.7.2019) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினார். 
 
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்ட இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்ப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதற்கு கனிவுடன் ஒப்புக் கொண்டார்கள்" என்று இதுதொடர்பான திமுகவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

English Summary
Dmk plea for translate verdict in tamil

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...