???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   04 , 2020  22:35:51 IST

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்

இதனிடையே, கடந்த 2 நாட்களாக அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், நேற்று முன்தினம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக சென்றார்.

அப்போது, கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளால் அன்பழகன் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மாஸ்க் வழியே ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், நேற்று 80 சதவிகித ஆக்சிஜன் வெண்டிலேட்டர் வழியே செலுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது 20% சதவிகிதம் குறைக்கப்பட்டு 60 சதவிகித ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...