???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக முன்னாள் அமைச்சரின் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

Posted : புதன்கிழமை,   மார்ச்   13 , 2019  22:28:54 IST

மறைந்த, திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில், சென்னை ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கியில் உள்ள 8 கணக்குகளிலிருந்து, வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 78 கோடி ரூபாய் பணம் அனுப்பி உள்ளார்.
 
முறையான ஆவணங்கள் இல்லாமல், முறைகேடாக இந்தப் பணத்தை அனுப்பி வைத்ததாக, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி, குற்றம்சாட்டப்பட்ட மணி அன்பழகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்தாதபட்சத்தில் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
 
மணி அன்பழகனுக்கு ஜாமீன் கிடைக்காத்தால், அவர் ஏற்கனவே சென்னை புழல் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...