அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கேரள மாநிலத்துக்கு தி.மு.க ரூ.1 கோடி நிவாரண நிதி!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   19 , 2021  09:09:18 IST

கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் சொல்லில் அடங்கா துயருக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவின் காரணமாக வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வெள்ள நீரில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகள் அடித்துச்செல்லப்படும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.
 
இடுக்கி மாவட்டம் கொக்காயர் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டனர். அப்போது 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் கட்டியணைத்தவாறு சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தக் காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தது. குழந்தைகள், அம்னா(வயது 7), அஃப்சான் (வயது 8), மற்றும் அஹியன் ( 4) எனத் தெரியவந்தது. இதுவரையில் வெள்ளத்தில் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமான மக்கள் நிவாரண மையங்களில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இடுக்கி அணை நிறைந்து வருவதன் காரணமாக நாளை திறக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் ரோஸி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
 
இன்னும் அக்டோபர் 20 முதல் 22 வரையில் கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...