???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தி.மு.க. ஊழல் கட்சியா?: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார்: அமித் ஷா 0 ரஃபேல் ஒப்பந்தம்-பாதுகாப்பு துறையில் நடந்த மிகப்பெரிய ஊழல்: பிரசாந்த் பூஷண் 0 கருணாஸ் கைது குறித்து சபாநாயகரிடம் முறைப்படி போலீசார் இன்று தகவல் 0 செல்போன் திருடியதாக கரூரில் சிறுவன் அடித்துக் கொலை! 0 கருகிய பயிர்களைக் கண்டு நாகையில் இரண்டு விவசாயிகள் தற்கொலை 0 கருணாசுக்கு ஒரு சட்டம்; எச்.ராஜா - எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?: ஸ்டாலின் கேள்வி 0 முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: எம்.எல்.ஏ கருணாஸ் கைது 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டீகேன்னா தினேஷ் கார்த்திக்... இறுதி பந்தில் அடித்த அந்த ஆறு!

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   19 , 2018  04:33:39 IST


Andhimazhai Image
 
இலங்கையில் நடக்கும் முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிப்போட்டியில் வங்க தேசமும் இந்தியாவும் மோதின.  முதலில் பந்துவீசிய வங்க தேசம் 166 ரன்களைக் குவித்தது. அவ்வளவு கஷ்டமான இலக்கு இது அல்ல என்பதால் இந்தியா எப்படியும் எளிதாக வென்று விடும் என்று ஆட்டத்தைப் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு மிகவும் திரில்ல்லிங்கான ஆட்டமாக இது அமைந்துபோய்விட்டது. ஆரம்பத்தில் ரோகித் சர்மா பழைய பன்னீர்செல்வமாக மாறி சிக்சர்களைப் பொளந்துகட்டினார். ஆனால் தவான், ரைனா, ராகுல் போன்றவர்கள் நின்று ஆடமுடியாத நிலை. கடைசியில் பாண்டேவாவது கைகொடுப்பார் என்றால் அவரும் தடுமாறினார். பதினெட்டாவது ஓவர் ஆரம்பத்தில் தினேஷ் கார்த்திக்கை உள்ளே வந்தார். 12 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தால்தான் ஜெயிக்க முடியும். வங்க தேச அணியினரோ முழு நம்பிக்கையில் இருந்தனர். எப்படியும் வென்றுவிடுவது.. பின்னர் பெரிதாக ஒரு பாம்பு டான்ஸ் போட்டு எல்லோரையும் வெறுப்பேற்றுட்வது என்று அவர்கள் திட்டம் போட்டிருந்தனர். ஏனெனில் சில காலமாகவே வங்கதேசத்துக்கும் இலங்கை அணிக்கும் உறவு சரி இல்லை. கடந்த ஆட்டத்தில் ஒருவரை ஒரு அடித்துக்கொள்ளவே போய்விட்டார்கள். இருப்பினும் கடைசி ஓவரில் வங்க தேச அணி வீரர் மகமதுல்லா அடித்து வெற்றி பெற வைத்திருந்தார். இலங்கை ரசிகர்களும் இதனால் வங்க தேச அணி மீது செம வெறுப்பில் இருந்தனர். எனவே இறுதிப்போட்டியில் அவர்கள் அனைவரும் இந்திய அணியையே ஆதரித்தனர். எனவே இந்திய மண்ணில் ஆடுவதுபோலவே இந்திய அணிக்கு அதிகப்படியான ஆதரவு இருந்தது. எனவே இந்திய அணி ஜெயித்தே ஆகவேண்டும். இல்லையெனில் ரசிகர்களைக் கைவிட்டது போலாகும்!
 
 
தினேஷ் கார்த்திக் வந்தவுடன் முதல் பந்தையே சிக்ஸருக்குத் தூக்கினார். அடுத்தது நாலு.. அதற்கு அடுத்தது ஆறு.. அடுத்தது பூஜ்யம்.. அடுத்தது ரெண்டு.. அடுத்தது நாலு என அந்த ஓவரில் 22 ரன்களைக் குவித்து.. பாரத்தைக் குறைத்தார். கடைசி ஓவரில் 12 ரன்கள் வேண்டும். இன்னொரு தமிழக வீரரான விஜய சங்கர் பந்தை எதிர்கொண்டார்... அவரால் ஒரு நாலு இரண்டு ஒன்றுகள் மட்டுமே எடுக்க முடிந்த நிலையில் கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் அவுட் ஆனார். இன்னும் இருக்கும் ஒரு பந்தில் ஐந்து ரன்கள் எடுக்கவேண்டும். மூன்றாவது தமிழரான வாஷிங்டன் சுந்தர் எதிர்முனையில் நின்றார். தினேஷ் கார்த்திக் பந்தை எதிர்கொண்டார். வலதுபக்கம் சரிந்து சென்ற பந்தைத் தூக்கினார்.. ஆறு ரன்கள்!  எட்டே பந்துகளில் 29 ரன்களைக் குவித்து வெற்றியை தந்துவிட்டார் தினேஷ் கார்த்திக்! அவ்வளவுதான்..
வங்க தேசத்தின் பாம்பு டான்ஸ் கனவு நொறுங்கிவிட்டது. பதிலுக்கு இலங்கை ரசிகர்கள் பாம்பு டான்ஸ் ஆடி பழிதீர்த்துக்கொண்டனர்.
 
 
பரபரப்பான இறுதிக்கட்டத்தில் விஜயசங்கர், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் என மூன்று தமிழர்கள் ஒரு சர்வதேசப் போட்டியில் ஆடி வெற்றி தேடித்தந்திருப்பது இதுவே முதல்முறை!
 
 
தினேஷ் கார்த்திக்கைச் சுருக்கி டீகே என்று போட்டு எல்லோரும் வாழ்த்திக் கொண்டாடிவிட்டனர். டீகேவை முன்னால் அனுப்பாமல் அனுபவம் குறைந்த விஜயசங்கரை முன்னால் பேட்டிங் செய்ய அனுப்பிய கேப்டன் ரோகித் சர்மா, டீகே எங்கு விட்டாலும் ஆடுவார் என்று புகழ்ந்து தள்ளவேண்டிய நிலைமை! தமிழ்நாட்டு ரசிகர்கள் இன்னும் முகநூல், டிவிட்டர் என்று ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டே இருக்கின்றனர்! ஒரே ஆட்டத்தில் டீகே தன்னை எல்லோரையும் கவனிக்க வைத்துவிட்டார்! இவர் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கலின் கணவர் என்பது பலருக்கும் நேற்றுதான் தெரிந்திருக்கிறது! தீபிகா போன்ற ஒரு பேரழிகையைக் கல்யாணம் செய்துகொண்டதற்காக தினேஷ் கார்த்திக் மீது கோபம் கொண்டிருந்தேன். இப்போது அது தீர்ந்துவிட்டது என்று  ஒரு ரசிகர் போட்ட ட்வீட் சின்ன உதாரணம்!
 
டீகேயின் வெற்றியை ட்விட்டரில் தீபிகா கொண்டாடிக்கொண்டிருக்கிறார்! அவருடன் சேர்ந்து தமிழ்நாட்டு ரசிகர்களும்!
 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...