செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சைதை துரைசாமியின் மகன் இயக்கும் ’என்றாவது ஒருநாள்’
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.
சைதை துரைசாமியின் மகன் இயக்கும் ’என்றாவது ஒருநாள்’
Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 20 , 2020 00:25:27 IST
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.
வெற்றி துரைசாமி உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்திற்கு ’என்றாவது ஒருநாள்’ என பெயரிடப்பட்டுள்ளது.
தனது படம் குறித்து பேசிய அவர், ‘நாளிதழ்களில் அன்றாடம் வரும் செய்திகளை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் தொகுப்பு தான் ‘என்றாவது ஒருநாள்’. குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எளிய மக்களும், கால்நடைகளுடானான அவர்களது உறவும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும்’ எனக் கூறியுள்ளார்.
விதார்த், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் நேற்று வெளியிட்டார்.
|
|