அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சாலையோரம் இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குநர்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   09 , 2021  10:33:43 IST

பழம்பெரும் இயக்குனர் எம்.தியாகராஜன் சாலையில் இறந்து கிடந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
 
நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் தயாரிப்பில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் M.தியாகராஜன். குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மாநகர காவல் திரைப்படம், விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் ஏவிஎம் ஸ்டூடியோ அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று காலை இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
 
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் M.தியாகராஜன் என்பது தெரிய வந்திருக்கிறது. மாநகர காவல், வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களின் மூலம் பிரபல இயக்குநராக திகழ்ந்த தியாகராஜன் சாலையோரம் இறந்து கிடந்த விஷயம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...