???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இயக்குநர் ராஜசேகர் உடல்நலக்குறைவால் மரணம்!

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   09 , 2019  00:11:50 IST


Andhimazhai Image

பிரபல இயக்குனரும், நடிகருமான ராஜசேகர் சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 65.



ராஜசேகர் சென்னை அடையாறு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு படித்தவர். தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து ‘ஒரு தலைராகம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அதன்பிறகு இந்த இரட்டையர்கள் ‘பாலைவனச்சோலை’ படத்தை இயக்கினர்.


பிரபு நடித்த மனசுக்குள் மத்தாப்பு, ராம்கி நடித்த சின்னப்பூவே மெல்லப்பேசு மற்றும் கல்யாண காலம், தூரம் அதிகம் இல்லை, பறவைகள் பலவிதம், தூரத்து பச்சை ஆகிய படங்களையும் இருவரும் இயக்கியிருந்தனர்.

பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் ராஜசேகர் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். இவருக்கு சாரா என்ற மனைவி உள்ளார்.

 

இந்த புகழ்பெற்ற இரட்டையரில் இப்போது யாரும் உயிருடன் இல்லை.இவருடன் இணைந்து படங்களை இயக்கியவரான ராபர்ட் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார்.

 

ராபர்ட், ராஜசேகர் இருவரையுமே சந்தித்து அவர்களைப் பற்றிய கட்டுரை அந்திமழை இரட்டையர் சிறப்பிதழில் 2015-ல் வெளிவந்துள்ளது.

 

“நாங்கள் இருவரும் ஒருமித்து எடுத்த முடிவுகள் சரியாக இருந்தன. அவருக்குப் பிடிக்காததை நான் செய்தததும், எனக்குப் பிடிக்காததை அவர் செய்ததும் வெற்றிபெறமுடியவில்லை. நாங்கள் இருவரும் பிரிந்ததுதான் மிச்சமாகிவிட்டது” என்று  ராஜசேகரும் “நாங்கள் கிருஷ்ணன்-பஞ்சு போலக் கடைசிவரை பிரியாமல்தான் இருப்போம் என்று நினைத்தேன். இப்படிப் பிரிவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்று ராபர்ட்டும் அந்த நேர்காணலில் சொல்லி இருந்தனர்.  அதை இங்கே படிக்கலாம்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...