செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Posted : வியாழக்கிழமை, ஜனவரி 21 , 2021 11:00:53 IST
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015-ம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ‘விசித்திரன்’ என்ற அதே டைட்டிலை பயன்படுத்தி ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் மூலம் இயக்குநர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் திரைப்படம் தயாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.கே.சுரேஷ் அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
தனது ‘விசித்திரன்’ தலைப்பில் படத்தை தயாரிக்க தடைவிதிக்கக் கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு குறித்து ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜோசப்’.மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வாங்கினார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த இத்திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே இயக்கியுள்ளார்.
|