???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திண்டுக்கல்: ஹாஸ்டலில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   15 , 2019  22:26:13 IST

திண்டுக்கல் மதுரை சாலையில் பேகம்பூர் அருகே உள்ளது அவர்லேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இதில் கொடைக்கானல் பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகளான வர்ஷா (14) தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு விடுதி வளாகத்திலுள்ள கழிப்பறைக்கு சென்று விட்டு திரும்பிய மாணவி தன்னை ஏதோ ஒரு பூச்சி கடித்து விட்டதாக அறையில் தன்னுடன் தங்கியுள்ள சக மாணவிகளிடம் கூறியுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் மாணவி வாயிலிருந்து நுரை தள்ளவே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல நகர தெற்கு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாம்பு கடித்து சக மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் விடுதியில் தங்கியுள்ள சக மாணவிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...