???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்!- மருத்துவர் இராமதாசு 0 கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் 0 கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடுக!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 0 தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா? -முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி 0 எட்டு போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்: உ.பி, ரவுடி விகாஸ் துபே கைது! 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   14 , 2020  20:44:49 IST

தமிழக கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நிதி நிலை அறிக்கைகள் வெறும் அறிவிப்புகளாக இருந்ததைப் போலவே, தங்களின் கடைசி முழு பட்ஜெட்டையும் இந்த ஆட்சியாளர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில், தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்திருப்பது கவலை அளிக்கிறது.

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் திறனற்ற நிர்வாகத்தால் ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனின் தலையிலும் சுமார் 57ஆயிரம் ரூபாய் கடன் சுமை ஏறியிருக்கிறது. 128 பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்தக் கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை.

தமிழக மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று பழனிசாமி அரசு கூறிவரும் நிலையில், வரி விதிப்பில் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வுகளில் வரலாறு காணாத இறக்கம் ஏற்பட்டு தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தமிழ்நாட்டின் நிதிநிலை சிக்கலாகி இருப்பதாகவும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் கீழடியில் அகழாய்வு வைப்பகம் அமைப்பதற்கு 12.21 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதனை உண்மையான அக்கறையோடு ஆட்சியாளர்கள் செயல்படுத்தவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...