???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம் 0 நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிமன்றம் 0 குடகு விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை 0 இரட்டை இலை சின்னம்: விசாரணை தேதி மாற்றம் 0 பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு! 0 காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லோரும் என்.ஆர்.ஐ.தான்: ராகுல்காந்தி 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, ஏடிஜிபி சத்யநாராயணா பணியிடமாற்றம்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  05:27:33 IST

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் தரப்பட்டுள்ளது என்றும், இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாகத் தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பரபரப்புக் குற்றம்சாட்டி இருந்தார்.

 

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

 

 இந்த நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்துப் பிரிவு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கர்நாடக அரசு, இன்று  பிறப்பித்துள்ளது.

 

ரூபாவை தொடர்ந்து சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கர்நாடக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., சத்யநாராயண ராவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏ.எஸ்.என்.மூர்த்தி சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...