அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தில் முதன்முறையாக ரூ.100ஐ கடந்தது டீசல் விலை!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   14 , 2021  11:44:10 IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்,டீசல் ஆகியவற்றின் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை அதிகரித்து வருகிறது.
 
பெட்ரோல் விலை நாடு முழுவதும்  100 ரூபாயை கடந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போது வெளியிட்ட அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக திமுக அரசு பெட்ரோலின் விலையில் ரூ.3ஐ குறைத்தது. இதை தொடர்ந்து அதன் விலை ரூ.100க்கு கீழ் வந்தது. எனினும், தொடர் விலையேற்றம் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது.
 
இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளது.  கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் டீசல்  ரூ.100.29க்கு விற்பனை செய்யப்படுகிறது. காட்டுமன்னார் கோவில் பகுதியிலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 100 ரூபாயை கடந்தது. கடலூரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.104.16, டீசல் விலை ரூ 99.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ 98.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 105.87 ஆக உள்ளது. சேலத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.98.27க்கும்  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.42க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலை ரூ.100ஐ கடந்துள்ளதால் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...