???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி!

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   23 , 2020  23:01:15 IST


Andhimazhai Image

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தோல்வியை தழுவிய சென்னை அணியின் கேப்டன் தோனி, போட்டி முடிந்த பிறகு “இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை” என பேட்டியளித்துள்ளார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ள சி.எஸ்.கே கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.  ஆடிய அனைத்து சீசன்களிலும் ப்ளே ஆஃப் சென்ற சென்னை அணி முதல் முறையாக அந்த வாய்ப்பை இழக்கிறது.

இதுகுறித்து போட்டிக்கு பின் பேசிய கேப்டன் தோனி, 'இந்த தோல்வி சற்று வேதனையாக தான் உள்ளது. இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை. இந்த சீசனில் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் தான் சிறப்பாக விளையாடினோம். அனைத்து வீரர்களும் தங்களால் முடிந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், எப்போதும் நாம் நினைப்பது மட்டுமே நடைபெறுவது இல்லை.நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத போது அதற்கான காரணங்கள் நூறு இருக்கும். அப்போது எல்லாம் நல்ல ஆற்றலுடன் தான் விளையாடுகிறோமா? என நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.  மீதமுள்ள 3 போட்டிகளில் சிறந்தவொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த ஆண்டு தொடருக்காக நல்ல முறையில் தயாராகி கொள்வோம். அணியின் கேப்டனாக எங்கும் ஓட முடியாது. அதனால் நான் அனைத்து போட்டிகளிலும் களமிறங்குவேன்'.  என கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...