???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை 0 ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் 0 கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் 0 வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 0 பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு 0 கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி! 0 கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம்! 0 கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார்! 0 ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உணவு இடைவேளைக்கு முன்னதாக சதமடித்து சாதனை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷிகர் தவான்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   14 , 2018  04:27:55 IST

 

டெஸ்ட் போட்டியில் முதல்முதலாக களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கியது இந்திய அணி. முதல் ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவானும் முரளிவிஜயும் நிலைத்து ஆடினர். ஷிகர்தவான் ஒரு கட்டத்தில் அடித்து ஆடத்தொடங்கினார். ஆப்கானிஸ்தானின் அச்சுறுத்தும் சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான் அடித்து நொறுக்கப்பட்டார். உணவு இடைவேளை முடிவதற்கு முன்பாகவே ஷிகர் தவான் நூறு ரன்களை எடுத்துவிட்டார்.

இப்படி உணவு இடைவேளைக்கு முன்பாக முதல் நாளில் நூறு ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் ஷிகர்தவான் தான். உலக அளவில் இவர் ஆறாவது வீரர். முதல் மூன்று பேர் இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக இந்த சாதனையைச் செய்தவர்கள். 1976-ல் மஜித்கான் என்ற பாக் வீரர், 2016-ல் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் இப்படி சதம் அடித்திருந்தனர். இவர்கள் வரிசையில் தவானும் சேர்ந்துள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...