???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை 0 கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 விமான போக்குவரத்து தொடங்கியது: முதல் நாளில் 630 விமானங்கள் ரத்து 0 தொழிலாளர் நல சட்டத்தில் சீர்திருத்தம் மட்டுமே செய்யப்படுகிறது: நிதி ஆயோக் துணைத்தலைவர் 0 தமிழகத்தில் 17,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: மேலும் 805 பேர் பாதிப்பு 0 தமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்: சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை! 0 வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை: உகான் வைராலஜி நிறுவனம் 0 தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் பி.தங்கமணி தகவல் 0 உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்: முதலமைச்சர் ரம்ஜான் வாழ்த்து! 0 ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது 0 ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தாராள பிரபு- திரை விமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   13 , 2020  06:40:09 IST


Andhimazhai Image

விந்தணு தானம் மற்றும்  தத்தெடுப்பு என்ற இரு முக்கிய விஷயங்களை ஒரு கமெர்ஷியல் கதை மூலம்  சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரி முத்து. இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து ஹிட்டடித்த ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் “தாராள பிரபு” என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ரீமேக் கதையை கிருஷ்ணா மாரிமுத்து  ரிமேக் கையாண்ட  விதம் பாராட்டதக்கது.

 

ரத்த தானம், உடல் தானம் என்ற அறிவியலை உரக்க மக்களுக்கு சொல்லும் பல படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் விந்தணு தானம் என்ற ஒன்று இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.  ஆண்- பெண்  உடல் சார்ந்த விஷயங்களை பேசுவது இன்னும் தடைசெய்யப்பட்ட விஷயம்தான். இந்த தடைகளை விளையாட்டுப்போக்கில்  உடைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.  ஆனால் இதுபோன்ற முயற்சிகள் மேலோட்டமாக கையாளப்படுவதுதான் படத்தின் சிக்கல். குழந்தையின்மை என்ற பிரச்சனை அதிகரித்து வருகிறது என்பதை காட்டிவிட்டு, சற்றென்று பிரபுவாக வரும் ஹரிஷ் கல்யாணுக்கு அதிக விந்தணு எண்ணிக்கை இருக்கிறது என்று காட்டப்படுகிறது.

 

குழந்தையின்மைக்கு ஆண் காரணமாக இருந்தாலும் ஒரு பெண் குற்றவாளி ஆக்கப்படுவது சில வசனங்கள் மூலம் படத்தில் காட்டப்படுகிறது. ஆனால் அதன் வலியை படம் வெளிப்படுத்தவில்லை. விந்தணுவின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கதாநாயகன் பிரபு ஒரு முழுமையான ஆண் என்பதை சித்தரிக்கும் விதத்தில் காட்சிகள் அமைத்திருப்பதை ஒரு அபத்தமாகத்தான் பார்க்க முடிகிறது. படத்தில் பிரபு மூலமாக பல குழந்தைகள் பிறப்பதாக காட்டப்படுகிறது. மேலும் பிரபு வழங்கிய விந்தணு தானம் மூலம் பிறக்கும் குழந்தையை  பிரபுவே தத்தெடுப்பது போல கதை நகர்கிறது.

 

நம்மூலமாகத்தான் இந்த உலகிற்கு குழந்தை வர வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிவைத்துவிட்டு தத்தெடுங்கள் என்ற கருத்தை பார்வையாளருக்கு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.  ஆனால் குழந்தை தத்தெடுப்பு அவ்வளவு சுலபம் அல்ல என்பதுதான் நிதர்சன உண்மை. சட்டரீதியாக ஒரு குழந்தையை தத்தெடுக்க பல ஆண்டுகள் தம்பதியர் காத்திருக்கிறார்கள்.  தத்தெடுப்பில் பல முறை இருக்கிறது என்பதுதான் உண்மையான நிதர்சனம்.

 

விவாகரத்தான  கதாநாயகியை கதாநாயகன் அப்படியே ஏற்றுகொள்வது  போன்ற காட்சிகளும், கதாநாயகியால் குழந்தை பெற இயலாது என்று தெரிந்ததும் தத்தெடுக்கலாம் என்ற முடிவை எடுக்கும் முதிர்ச்சியான ஆண் கதாபத்திரமும் காலத்தின் மாறுதல்களைக் காட்டுகின்றன.

 

படத்தில் அனைவரின் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் விவேக். ஒட்டுமொத்த படத்தை தன் முதுகில் தூக்கி சுமந்திருக்கிறார். ஹரிஷ் கல்யாண் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி தன்யா ஹோப்பும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார் படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். அதில் அனிருத்தும் ஒருவர். 

 

-வாசுகி

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...